5 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது தேசிய பாதுகாப்பை பற்றி பேசுவது ஏன்?: முதல்வர் கமல்நாத்

போபால்:

5 ஆண்டுகால ஆட்சியில் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்து விட்டு இப்போது தேச பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி பேசிவருவதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லம் என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் கம்லநாத், ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியு ராணுவத்தைக் கட்டமைத்தபோது, மோடிக்கு பேன்ட், பைஜாமா கூட போடத் தெரிந்திருக்காது.

கடந்த 5 ஆண்டுகளாக எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், தற்போது தேச பாதுகாப்பு பற்றி மோடி பேசுகிறார் என்றார்.