“டைம்” 100 செல்வாக்கு நபர்கள் 2016: ரகுராம்,சானியா,ஃப்லிப்கார்ட் பன்சால்

time-india-list

நியூயார்க் “டைம்” பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்குமிக்க 100 மக்கள் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது,

இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கக் கூடியவராகக் கருதப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஃப்ளிப்கார்ட் உரிமையாளர்கள் பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் நிறுவனர்கள் டைம் இதழின் ‘உலகின் 100 மிகவும் செல்வாக்குள்ள மக்கள்’ என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். “கலை, அறிவியல், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் ஜொலித்தவர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர், குறிப்பாக, ஆஸ்கார் வென்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ,  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், அமெரிக்க இசையமைப்பாளர் லின் மானுவல்-மிராண்டா போன்ற முன்னோடி தலைவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

RaghuramRajan-RBI-080613

ரகுராம்ராஜன் குறித்து “இந்தியாவின் தீர்க்கதரிசியான வங்கியாளர் எனவும் கடினமான சூழலில், வளர்ந்து வரும் சந்தையில், இந்தியாவை ஒரு முக்கிய நட்சத்திரமாக  மாற்றியதில் ஒரு பெரிய பங்கை வகித்த பொருளாதார மடாதிபதி என டைம் இதழ் புகழாரம் சூட்டுயுள்ளது.

சானியா மிர்ச்சாவின்  “நம்பிக்கை, வலிமை மற்றும் அனுசரிப்பு” அவரை  டென்னிஸ் அப்பால் பிராசிக்க செய்கின்றது என கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர்  புகழாரம் சூட்டியுள்ளார்.

பிலிப்கார்ட் ஆன்லைன் வர்த்தகத்தை அந்த நிறுவனம் 2007 ல் தொடங்கிய போது ஒரு தசாப்தத்தில்(பத்தாண்டுகளில்) 100 மில்லியன் அமெரிக்க டாலராக எங்கள் மதிப்பு இருக்கும் என முதலீட்டாளர்கள் பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் கூறியபோது அது அவர்களின் திமிர்பிடித்த பேச்சு எனப் பார்க்கப் பட்டது. ஆனால், “அது அவர்களின் தன்னடக்கமான பேச்சாக இப்பொழுது மாறி விட்டது. ஏனெனில் பிலிப்பகார்ட் இப்போது 75 மில்லியன் பயனர்கள் மற்றும்  13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.” என டைம் நாளிதழ் கூறியுள்ளது.

modi
2016 பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிய இந்தியப் பிரதமர் மோடி

கடந்த ஆண்டு டைம் இதழின் “செல்வாக்குள்ள 100 நபர்கள்-2015”  பட்டியலில் இடம்பிடித்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பிடிக்கத் தவறி விட்டார்.  மோடியின் பக்தர்களால் உயர்த்திப்பிடிக்கப் பட்ட போலிப் பிம்பம் அறுந்துத் தொங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.