நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நடைபெற மூன்றாண்டுகள் இருக்கும்வேளையில்,  விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கம், தமிழகம், மற்றும் அசாம் , மற்றும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில், பா.ஜ.க. முக்கிய சோதனைகளை எதிர்கொள்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகள் கணிசமான அதிகரித்துள்ளது,வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினை கடுமையாக பாதித்துள்ளது.  சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில், செழிப்பான மத்தியத்தர மக்கள் மத்தியில்,  நரேந்திர மோடியின் செல்வாக்கு  ஒப்பீட்டளவில்  பலவீனமடைந்துள்ளது.
modicartoon1
கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் மீதான  விலையுயர்வு மற்றும் அரசின் கடன் வாங்கும் செலவுகளை குறைக்க மத்திய வங்கியின்  பல வருடங்களாக கல்வி மற்றும் மருத்துவமனைகள் மீதான் முதலீட்டினை வெகுவாக குறைக்கும் கொள்கை ஆகியன பெரும்பாலான இந்தியர்களுக்கு அடிப்படைகல்வி மற்றும் சுகாதாரத்தையே “ ஆடம்பரப் பொருளாய் மாற்றியுள்ளது.
கொல்கத்தாவில் IT ஊழியராக பணிபுரியும் 47 வயது ,சம்புத்தா பானர்ஜி கூறுகையில்  “என் மகனின் கல்வி மற்றும் குடும்ப மருந்துகளுக்குச்  செய்யும் செலவு வெகுவாக அதிகரித்து விட்டது. மேலும் எரிபொருள் மீதான மானியத்தையும் அரசு பறித்துவிட்டதோட்டு நில்லாமல் எங்களின் ஓய்வூதிய சேமிப்பு மீதும் வரிகளை சுமத்த முயற்சி எடுத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் விரக்தியுடன்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பது பற்றி இருமுறை யோசிக்க வுள்ளார்.
இவரின் கருத்து இன்னும் மொத்த இந்தியாவின் கருத்தாய் மாறிவிடவில்லை என்றாலும், பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வாழும் இந்தியர்களிடம் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வர்த்தக சார்பு கொள்கைகள் கொண்டுவருவதாக 2014 தேர்தலில் மாபெரும் வாக்குறுதிகளை அளித்து  அதிகாரத்தை கைப்பற்றிய மோடி அரசாங்கம், ஏற்கனவே  மக்களை அதிருப்திய செய்கின்றது.
மோடி ஏற்கனவே  மோசமான விளைச்சல்  காரணமாக பேரும் பின்னடைவைச் சந்தித்துள்ள வேளாண்மைத் துறைக்கு உதவிகள் செய்தாலும், 1.3 பில்லியன் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கும்  மத்தியதர வர்க்கத்தை  திருப்திபடுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகின்றது.
ஒரு மூத்த நிதி அமைச்சக அதிகாரி கூறுகையில், ” பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் விலை உயர்வு நடுத்தர வர்க்க குடும்பங்களின்  செலவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே விலையுயர்வு பிரச்சனையை அலட்சியம் செய்துவிட முடியாது. அதேவேளையில், இந்தப் பிரச்சினையை  குறுகிய காலத்தில் தீர்த்துவிடவும் முடியாது ” என்றார்.
இம்மக்களின் அழுத்தத்தை குறைக்க, இந்த ஆண்டு 24 சதவீதம்,  அதன் 10 மில்லியன் ஊழியர்களின் சம்பளங்களை  உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மோடி பதவியேற்ற மே 2014 முதல் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கல்வி 13 சதவீதம், வீடுமனை 10 சதவீதம், மருத்துவம் 14 சதவீதம் மடுர்ம் மின்சாரம் 8 சதவீதம்.உணவு மற்றும் குளிர்பான விலை 10 சதவீதம் குரைந்தாலும்,  மத்திய வர்க்கம் பயன்படுத்தும் பால், முட்டை விலை உயர்ந்துள்ளது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் க்ச்சா எண்ணை விலையின் வீழ்ச்சியின் பலனை அனுபவிக்க விடாமல் பல்வேரு வரிகளை விதித்து பிடுங்கிக்கொண்டது.
இவ்வாறு மத்தியவர்க்கத்தினரை கசக்கிப் பிழியும் அரசின் போக்கினை புடம்போட்டு காட்டுவிதமாக ஓய்வூதிய நிதியின் மீது வரி விதிக்கும் தன் திட்ட்த்தினை உழைக்கும் வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக திரும்பப்பெற்றுக் கொண்டது. தேசிய தேர்தல்கள் மீண்டும் நடைபெற மூன்றாண்டுகள் இருக்கும்வேளையில்,  விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கம், தமிழகம், மற்றும் அசாம் , மற்றும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில், பா.ஜ.க. முக்கிய சோதனைகளை எதிர்கொள்கிறது.
வெறுப்புணர்வுள்ள ஒரு நடுத்தர வர்க்கமும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் ரகுராம் ராஜனுக்கு நெருக்குதலை உண்டு பண்ணியுள்ளது. அவர்  மார்ச், 2017 க்குள்  நுகர்வோர் விலை பணவீக்கத்தை ஐந்து  சதவீதமாக கொண்டுவர உறுதி கொடுத்துள்ளார் .  ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு 125 அடிப்படை வட்டி விகித்த்தை மேலும் இந்த ஏப்ரல் 5 ம் தேதி புள்ளிகள்  25 அடிப்படை புள்ளிகள்  குறைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
PM modi
ஜனவரி மாதம் 5.69 சதவீதமாக இருந்த ஹெட்லைன் சில்லறை பணவீக்கம் பிப்ரவரி மாதம் 5.18  சதவிதமாக  தளர்ந்துள்ளது, ஆனால் உணவு மற்றும் எரிபொருள்   பணவீக்கம், 4.75 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கல்வி, வீட்டு வசதி மற்றும் தனிப்பட்ட சேவைக்கான  செலவு அதிகரிக்கப்பட்டது ஆகும்.
pic-big-narendra-modi
மோடி மீது பல புகார்கள் வைக்கும் போதிலும், மோடிக்கு “அச்சே தின்” கொண்டுவர இன்னும் அதிக நேரம் கொடுக்கத்  தயாராக இருக்கிறார்கள்.
ஜார்க்கண்ட்டில்  ஒரு மருந்து நிறுவனத்தின் பணிபுரியும் குந்தன் முகர்ஜி,51 வயது கூறுகையில்  “அவர் மீது எங்கள் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தது. எனினும்,   காலம்காலமாக உள்ள பிரச்சினைகளை தீர்க்க மோடிக்கு இன்னும் அவகாசம் தேவை,”எனக் கூறினார்.
மோடியின் செல்வாக்கு சரிந்து வருவது கண்கூடு. அவரின் பிம்பத்தை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும், பீகாரில் நிதிஷ்குமாரும் தவிடுபொடியாக்கினர்.
தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் மோடியின் பிம்பம் நாடாளுமன்றத் தேர்தலின்போதே எடுபடவில்லை.
மேலும் தமிழகத்தில், இன்றைய நிலவரப் படி, பா.ஜ.க. சீண்டுவாரின்றி தனித்து விடப்பட்டுள்ளது.
பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கிகொண்ட தமிழகத்திலும்,  இடதுசாரிகளின் கருத்துக்களை  உள்வாங்கிக் கொண்ட மேற்கு வங்கத்திலும் மதவெறி அரசியல் எடுபடாது என்பதை மக்கள் மீண்டும் ஒருமுறை நிருபிப்பார்கள்.