விருதுநகர்:

லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடியுள்ள திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடியையும், தமிழக அரசையும் கடுமையாக சாடினார். மோடி இங்க வந்து செமையா சீன் போடுறார் என்று கடுமையாக சாடினார்.

இன்று நடைபெற்ற திமுக தென் மண்டல மாநாடு, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கப்புள்ளி என்றும், திமுக  ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று பேசிய ஸ்டாலின், அதிமுக பாஜக கூட்டணியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டிற்கு வந்து மக்களை கவனிப்பது போல சீன் காட்டுகிறார். அடிக்கடி இனி வந்து இப்படித்தான் பேசுவார். 130 கோடி மக்களை மோடி நடுத்தெருவில் நிறுத்தியவர் மோடி என்று குற்றம் சாட்டியவர், பணமதிப்பிழப்பு நீக்கம் மூலம் நடு ரோட்டிற்கு மக்களை கொண்டு வந்தார் என்றும்  கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கொள்ளைக்கார எடப்பாடி ஆட்சிக்கும், பாசிச பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க கூடிய கூட்டம் இந்த கூட்டம்,  திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் வரலாறு படைக்கும் நாள் நெருங்குகிறது என்றார்.

தமிழகத்தில், பாஜக அதிமுகவை மிரட்டி பணிய வைத்து கூட்டணி ஏற்படுத்தி இருப்பதாகவும், மோடியா ? லேடியா ? என பிரச்சாரம் செய்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்று அஞ்சி பயந்து கூட்டணி வைத்துள்ளனர்.ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்கும்போது மோடி ஒருமுறையாவது வந்து பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக முதல்வர்  இபிஎஸ் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறிய டாக்டர் ராமதாஸ், தற்போது அவருக்கு பிஆர்ஓ ஆக பணியாற்றி வருகிறார்…  தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை துணிச்சலாக கேட்க முடியாத முதல்வர் எடப்பாடி,   மோடியின் தலைமையில் தமிழகம் முன்னேறியுள்ளதா என்றும் கேள்வி விடுத்தார்.

ஜெயலலிதா இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என ஓ.பன்னீர் செல்வம் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகை அவிழ்த்து விட்டுள்ளார். ஐந்து வருடம் எந்த வளர்ச்சியும் வரமுடியாத நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சியடையும் என்கிறார் ஓபிஎஸ்.
விலைவாசி குறைந்துள்ளது என்கிறார் இபிஎஸ், ஆனால் கேஸ் உள்பட எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்துவிட்டது.  ஏதாவது ஒரு ஊரில் உள்ள மக்கள் விலைவாசி குறைந்துள்ளது என்று சொல்லட்டும் பார்க்கலாம் என்று கேள்வி விடுத்தார்.

தாம் நடத்திய கிராம சபை கூட்டங்களில் விலைவாசி உயர்வு பற்றி மக்கள் முறையிட்டனர்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை குறைக்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை
ஆனால், தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்கிறார்கள்… அதை  நாங்கள் தடுக்க வில்லை.முறையாக கொடுங்கள் என்கிறோம்.  8 ஆண்டு களாக அதிமுக ஆட்சி தொடர்ந்தும் ஏழைகள் எண்ணிக்கை குறையவில்லையே  என்று சாடினார்.

மேலும் மத்திய மாநிலஅரசுகள் மீது  பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஸ்டாலின், நீட் தீர்மானம் என்ன ஆனது, மேகதாது அணையை ஏன் தடுக்கவில்லை, சேது சமுத்திரம் திட்டம் என்ன நிலையில் இருக்குது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுகணை தளம் என்னவானது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி,  தேர்தல் வருவதால் அடிக்கடி தமிழகம் வருகிறார்.  மக்களிடையே சீன் போட்டு வருகிறார்..  130 கோடி மக்களையும் தெருவில் நிறுத்தியது தான் பிரதமர் மோடியின் சாதனை என்றவர்,  நாட்டின் மக்களின் வயிற்றில் அடித்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.