1aajanடில்லி:
‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா’ என்ற பெயரில், வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்க வகை செய்யும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி  தொடங்கி வைத்தது அனைவரும் அறிந்ததே.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்துடன், அந்த கணக்கின் சேவைகளைப் பெறுவதற்கான செல்ஃபோன் வங்கிச் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஆனால் இந்த திட்டம் எதிர்பார்த்தபடி  திறம்பட செயலாற்றவில்லை என்பது குறித்து மோடி கவலை அடைந்துள்ளார்.
ஜன் தன் திட்டத்தின்படி  தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளின் வாடிக்கையாளர்கள் *99# என்ற எண்ணில் கணக்கு விவரங்களை அறிய வசதி செய்யப்பட்டிருக்கிறது.  அந்த கணக்கின் சேவைகளைப் பெறுவதற்கான செல்ஃபோன் வங்கிச் சேவையையும் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கு பவர்களுக்கு ரூ.1.லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடும் அளிக்கப்படும்.
நாட்டில் வங்கிக்கணக்கு கூட இல்லாத ஏழை மக்கள் பல கோடிப்பேர் உள்ளனர் எனவே  வங்கிக் கனக்கு இல்லாத அத்தனை பேர்களுக்கும்  வங்கிக் கணக்கை ஆரம்பித்துக்  கொடுத்து அவர்களை ‘நிதித் தீண்டாமையில்’ இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் நோக்கமாகும்.
2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்படி நாடு முழுவதும் பல்வேறு அறிமுக நிகழ்ச்சிகளும், முகாம்களும் நடத்தபட்டு கோடிக்கணக்கான வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டன. ஆனால் திறக்கப்பட்ட பல கோடிக்கணக்குகளில் பணம் இல்லை என்பதும், வங்கி ஊழியர்கள்கூட மேலிடத்து அழுத்ததுக்கு பயந்து வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருப்பதாகவும் வந்திருக்கும் தகவல்கள் மத்திய அரசை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
திட்டங்களெல்லாம் இப்படி தோல்விமுகத்தில் இருக்கும்போது சாதனைகள் பற்றி மத்திய அரசு தம்பட்டம் அடித்துக்கொள்வது அப்பட்டமான ஏமாற்று வேலை என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தப் பிரச்சனையை சரியான விதத்தில் எதிர்கொண்டு களங்கத்தைத் துடைக்கும் என்ற முயற்சியில் நிதி அமைச்சகம் தீவிரமாக இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேமிப்பு என்பதே நமது நாட்டின் இயல்பு. நாம் கடன் அட்டைகள் சார்ந்து இல்லை. வங்கி கணக்கு வைத்திருப்பது முக்கிய பாதுகாப்பு அம்சம் ஆகும். பெண்களுக்கு நிதி அதிகாரம் அளிப்பதில் வங்கி கணக்குகள் முக்கிய பங்காற்றும்எ ன்று மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.