இந்தாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி, தேர்தல் கமிஷனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், கடந்தமுறை நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது, அங்கே மோடி என்னென்ன செய்தாரோ, அதைப்போன்றே அவரின் பீகார் நடவடிக்கைகளும் உள்ளதாக கூறுகிறார் கட்டுரையாளர் பிரபாஷ் கே துத்தா.

பீகாரில், ரூ.541 கோடி மதிப்பிலான 7 நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் மோடி. வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் கலந்துகொண்டார்.

இந்த திட்டங்களில் நான்கு திட்டங்கள் நீர் பகிர்மானம் தொடர்பானது. இரண்டு திட்டங்கள், கழிவுநீர் மேலாண்மை தொடர்பானது, மற்றொன்று ஆற்றங்கரை மேம்பாடு தொடர்பானது.

மேலும், இம்மாத துவக்கத்தில் பிரதம மந்திரி மத்சயா சம்படா யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் மீன்பிடித்தல், பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் வேளாண்மை தொடர்பாகவும் சில திட்டங்களை துவக்கி வைத்தார்.

கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின்போதும், இதேமாதிரியான நடவடிக்கைகளைத்தான் அம்மாநிலத்திற்கு மேற்கொண்டார் மோடி. இந்த இருமாநிலங்களுக்கும் இடையில் பல வேற்றுமைகள் இருப்பினும், இந்த விஷயத்தில் ஒற்றுமை காணப்படுகிறது என்றுள்ளார் கட்டுரையாளர்.