விஜயவாடாவில் வரவேற்பு பேனரை விட எதிர்ப்பு பேனர்கள் ஏராளம்: ‘மோடி நோ என்ட்ரி’ முழக்கத்தால் பாஜக கலக்கம்

விஜயவாடா:

பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ என்ட்ரி’ கோஷம் பேனர்கள் வழியே ஒலித்துக் கொண்டிருக்கிறது.


கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடந்தது.

தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைப்பதாக குற்றஞ்சாட்டி இந்த போராட்டம் நடந்தது.
அசாம் சென்றபோது மாணவர்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். காரில் கடந்து சென்ற மோடியை நோக்கி, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய் என்று கோஷமிட்டனர்.

இந்நிலையில், நாளை விஜயவாடாவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆந்திரா முழுவதும் ‘மோடி நோ என்ட்ரி’ என்ற பேனர்கள் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் இருந்தது.

விமான நிலையத்திலிருந்து விஜயவாடா வரை மோடியின் படம் இடம் பெற்ற பேனர்களை வைத்து எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.