இலங்கை செல்கிறார் மோடி! மீனவர் பிரச்சினை குறித்து பேசுவாரா?

டில்லி,

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவாரா என  தமிழக மீனவர்களிடையே எதிர்பார்த்து எழுந்துள்ளது.

அடுத்த மாதம் மோடி இலங்கை வர இருப்பதாக இலங்கை  நீதித்துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி இலங்கையில், புத்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

அவரது நிகழ்ச்சியில் மீனவர் பிரச்சினை பற்றி ஏதும் இல்லை.

ஆனால், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகிறது. ஆகவே, இதுகுறித்து பேச வேண்டும் என்றும்,  பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும்  என தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மோடி செய்வாரா….?

 

Leave a Reply

Your email address will not be published.