நாளை இலங்கை செல்கிறார் மோடி! மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பாரா?

--

டில்லி:

ரண்டு நாள் பயணமாக நாளை  பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார். இந்த பயணத்தின்போது தமிழக மீனவர்களின் பிரச்சினையில் தீர்வு எட்டப்படுமாக என்று எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

நாளை மாலை கொழும்பு செல்லும் அவர் மறுநாள் வெள்ளியன்று புத்தர் ஜெயந்தி விழாவை துவக்கி வைக்க உள்ளார்.

அதைத்தொடர்ந்து மத்திய மாகாணத்திற்கு செல்லும் அவர் அங்கு  தமிழர்களுக்காக இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பொதுக்கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

மோடி இலங்கை வருவதை தொடர்ந்து சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விழாவில் மோடியுடன் அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோரும்  பங்கேற்க உள்ளனர்.

அவரது பயண நிகழ்ச்சியில் மீனவர் பிரச்சினை பற்றி ஏதும் இல்லை.  ஆனாலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதை யாகிறது. ஆகவே, இதுகுறித்து இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும், இலங்கை பிடித்து வைத்துள்ள  தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும்  என தமிழக மீனவர்கள் மற்எறும்திர்பார்க்கிறார்கள். ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மீனவர்களை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், இலங்கை செல்லும் பிரதமர் தமிழக மீனவர்களை பிரச்சினையில் அக்கறைக் காட்டுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.