சென்னை:

`ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கென மோடி அரசு எதையும் செய்யவில்லை!’  என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி சர்ச்சைக்குரிய பதிவு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நெட்டிசன்கள் பாஜகவினரின் டிவிட் குறித்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

#Modi4NewIndia என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

ஏற்கனவே பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான, தருண்விஜய் மோடி, நரேந்திர மோடி தானாக பிரதமராக வில்லை… அவர் தனது காட்டு மிராண்டித்தனத்தை கைவிட வேண்டும் என்று பதிவிடப்பட்டு, பின்னர் அது ஹேக்கரால் பதிவிடப்பட்டது என்று சல்ஜாப்பு வாங்கியிருந்தார்.

அதுபோல தற்போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பு வகிக்கும், பொன்.ராதாகிருஷ்ணனின் பதிவும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளமான டிவிட்டரில், பாஜக நிர்வாகிகள் இதுபோன்று பதிவை போடுவதும், பின்னர், அதை நீக்குவதும், அதற்காக மன்னிப்பு கோருவதும் தொடர்ந்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஐடி குழுவில் உள்ள  உறுப்பினர்களுக்குள் பரிமாறப்படும் அறிக்கையில் யாரோ ஒரு நபர், பி.ஜே.பி ஆட்சியையும், மோடி அரசையும் விமர்சிப்பது போன்ற கருத்துக்கள் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், அது என்ன தகவல் என்றுகூட அறியாமல், பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவின்  பல்வேறு உறுப்பினர் களும், மாநிலக் கிளைகளும் இதையே செய்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய டிவிட்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததும், பதிவிட்டப்பட்ட தகவல்கள் உடடினயாக நீக்கப்பட்டன.

இதுபோல பாஜகவினரின் மற்றொரு இந்தி டிவிட் பதிவில்,   மோடி இந்தியாவின் கிராமங்களை அழித்துவிட்டார்’, ‘மோடி அரசு பெண்களை சமையலறையின் அடிமையாக்கிவிட்டது’ என கூறப்ட்டுள்ளது.

  #Modi4NewIndia என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. இதுபோன்ற டிவிட்கள் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதற்கிடையில், இதுபோன்ற போலி செய்திகளை கண்டுபிடித்து, அதன் உறுதிததன்மை குறித்து ஆய்வு செய்து வரும் ஏல்டி செய்தி நிறுவனத்தின் பிரதிக் சின்ஹா இந்த போலியான டிவிட்கள் குறித்து அம்பலப்படுத்திஉள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், இதுபோன்ற டிவிட்கள்  பார்ப்பதற்கு நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால், அரசுக்குத் தொடர்பில்லாத அமைப்பு ஒன்று, பி.ஜே.பி அலுவலகத்தில் அமர்ந்தபடி, இணை அமைச்சர் டிவிட்டரைக் கட்டுப்படுத்துவது தெரிகிறது… என்றும் கூறி உள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி வரும் பாஜக இன்று அந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக பெரும் தலைவலியை சந்தித்து வருகிறது.  ஏற்கனவே நாடு முழுவதும் மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பு கிடையாது என்று, மோடி செல்லும் பகுதிகளில் எல்லாம் வேலையில்லா பட்டதாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளிலேயே, பாஜக அரசை கடுமையாக விமர்சிப்பது போன்ற டிவிட்டுகள் பதிவிடப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.