எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மோடி அரசு தோல்வி: ஆர்டிஐ தகவல்

டில்லி:

மோடி தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதும் நாடு முழுவதும் 13 இடங்களில் 3 வருடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தது.

ஆனால், உறுதி அளித்தபடி எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதில் தோல்வி அடைந்துள்ளது, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என்று கடந்த வாரம் மோடி அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்காக எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.  தமிழக மக்களை ஏமாற்றவே  பாஜக அரசு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு  உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மோடி அரசு தயாராகி வருகிறது. ஆனால், மத்திய அரசுசு ஏற்கனவே அறிவித்த பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மோடி பதவிக்கு வந்ததும் நாடு முழுவதும் 13 எய்ம்ஸ் உயர்தர மருத்துவமனைகள் அமைக்கப்படும என்றும், இந்த மருத்துவமனைகள் 3 ஆண்டுகளுக்குள், அதாவது 2017ம் ஆண்டுக்குள்  அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும்  அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மோடியின் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக ஆர்டிஐ (தகவல் பெறும் உரிமை சட்டம்) மூலம் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இந்த தகவலை தெரிவித்து உள்ளது.

இமாசலப் பிரதேசம், ஜம்மு,காஷ்மீர். பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனை  அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக  எந்தவொரு நிதிகளும் ஒதுக்கப்படவில்லை என்பதும் ஆர்டிஐ தகவல் மூலம்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே மோடி அரசு இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு செயல்பாட்டு வந்துவிடும் என்றும் தமிழக பாஜ தலைவர்களும், தமிழக அரசும் பெருமிதமாக  மார்தட்டி வரும் வேளையில்,  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக  மத்திய அரசு எந்தவொரு நிதியும் ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்திருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை….