ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் மோடி அரசு தலையீடு: பன்னாட்டு நாணய நிதியகம் எச்சரிக்கை

டில்லி:

ந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு ஐ.எம்.எஃப். எனப்படும் உலக பன்னாட்டு நாணய நிதியம் (The International Monetary Fund) கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், மோடி அரசின் தன்னிச்சையான பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கை காரணமாக பதவி விலகிய நிலையில், மீண்டும்  ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

வட்டி விகிதங்களை குறைத்தல், கடன் சுமையில் சிக்கி தவிக்கும் 11 பொதுத்துறை வங்கிகளுக்கு எளிதாக கடன் வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு தலையிடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 1934ம் ஆண்டு அமல்படுத்தப்பட்  ரிசர்வ் வங்கி  சட்டத்தின் 7வது பிரிவை மத்திய அரசு பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சட்டப்பிரிவின் மூலம், முக்கிய கொள்கை முடிவுகளில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு வழி காட்டுதல்கள் வழங்க முடியும்.

முதல் இந்த சட்டத்தை எந்த அரசும் பயன்படுத்தவில்லை. தற்போது, இந்த சட்டப்பிரிவை மத்திய அரசு பயன்படுத்துவது அந்த அமைப்பின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு தலையிடுவதை, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்  ஆச்சார்யா நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். ,  மத்திய அரசு பாராளுமன்ற் தேர்தலை மனதில் கொண்டு  ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவதாக கூறினார்.. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதன் காரணமாக தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுஉலகம் முழுவதும் பொருளாதார மேதைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், தான் பதவி விலகப்போவதில்லை இன்று ஆதாரமற்ற தகவல் என்று உர்ஜித்பட்டேல் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் உலக பன்னாட்டு நாணய நிதியம்  அமைப்பின் செய்தி தொடர்பாளர் கெர்ரி ரைஸ்,  இந்தியாவில் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதி அமைச்சகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக  தெரிவித்து உள்ளார்.

மேலும்,  எந்த ஒரு நாட்டின் மத்திய வங்கியின் செயல்பாடுகளிலும் மத்திய அரசோ, தொழில்துறையோ தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,  இத தான் உலக அளவில் சிறந்த நடைமுறை என கெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.