டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் பற்றாக்குறையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்கிறது.

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளதால் நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை உருவாகி உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் கூடுவதையும், தேர்தல் பிரசாரங்களையும் ரத்து செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தினார்.