மும்பை,

மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித புது திட்டங்களும் இல்லை என்றும், கடந்த காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முன்னணி அரசின் திட்டங்களையே மறு பெயரிட்டும், தொடங்கியும் வைத்து வருகிறது மோடி அரசு  என்று கூட்டணி கட்சியான சிவசேனா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

மோடியின் 3 ஆண்டுகால ஆட்சி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி  (UPA United Progressive  Alliance) ஆட்சியின்போது  சில முக்கியமான மற்றும் பெரிய திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. அதுவே, இப்போது சீரமைக்கப்பட்டு, திறந்தும் வைக்கப்பட்டுள்ளன.

அசாமில் உள்ள புபன் ஹசிகா தோலா சதியா பாலம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சென்னானி-நஷ்ரி சுரங்கப்பாதை ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு என்றும்,

மோடி அரசாங்கத்தின் “தைரியமான மற்றும் லட்சியமான” முடிவு வர்ணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு  அறிவித்தபிறகு, நாட்டில்  தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் ஐ.டி. பிரிவில் பெரிய அளவிலான பணியிழப்பு ஏற்பட்டு ஒரு மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் இந்த அறிவிப்பைத் தவிர, வேறு எந்தவித புதிய நவடிக்கையை எடுத்திருக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், பங்குச் சந்தை ஏற்றத்தின் காரணமாக மோடி  அரசாங்கம் மகிழ்ச்சியடைந்துள்ளது, ஆனால் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் துயரமான நிலையும்,  விவசாயிகளையும் அழிவுகள் பற்றியும் மோடி அரசு கவலைகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை  குப்பைக்கழிவுகளாக செல்ல காரணமாக இருந்த பண மதிப்பிழப்புக்கு செய்வதற்கு ரிசர்வ் வங்கிக்கு அனுமதி கொடுத்தது யார் என்றும் கேள்வி விடுத்துள்ளது.

மோடியின் மூன்று ஆண்டு சாதனைகள் என்று பாரதியஜனதா கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், கூட்டணி கட்சியியான சிவசேனா, மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் எதுவுமே இல்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.