நாக்பூர்:

தேசிய நெடுஞ்சாலையில் 125 கோடி மரங்களை வளர்க்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபின் நாக்பூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நடந்து கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அனைத்தும் 2022-ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும்.
புதிய பணிகளும் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் நிறைவுபெறும்.

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, தேசிய நெடுஞ்சாலையில் 125 கோடி மரங்கள் வளர்க்கப்படும். இது சுற்றுச் சூழலை பாதுகாக்க உதவும் என்றார்.