ஆம்ஆத்மி கபில்மிஸ்ராவின் சர்ச்சை வீடியோ தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி இடைநீக்கம்: மத்தியஅரசு நடவடிக்கை

டில்லி காவல்துறைக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ராவின் வெறுப்பு வீடியோ வெளியிட்டது தொடர்பாக மத்திய பாஜக அரசு  ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை  இடைநீக்கம் செய்து உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கபில் மிஸ்ரா டெல்லி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்த தைத் தொடர்ந்து  மோடி அரசு ஐஏஎஸ் அதிகாரி ஆஷிஷ் ஜோஷியை தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த, நடிகர் கமல்ஹாசன், நசிருதீன் ஷா, பஞ்சாப் அமைச்சர் சித்து, சமூக ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், ஸ்ஹேலா ரஷீத், பிரசாந்த் பூஷன், பத்திரிகையாளர்  பர்கா தத் போன்றவர்களை மக்கள் அடித்து உதைத்து சாலைகளில்  இழுத்து செல்ல வேண்டும் என்று வீடியோவில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரசாத் பூஷன் இந்த வீடியோ தொடர்பாக மிஸ்ராவை கைது செய்துநடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜோஷி எழுதிய கடிதத்தில், மிஸ்ராவின் வீடியோ குற்றவியல் மற்றும் ஐ.டி. சட்டத்தை மீறியது என்று  தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து மிஸ்ராவின் வீடியோ, டிவிட்டர் மற்றும் பேஸ்புக் வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலானது.

இது தொடர்பாக காரசாரமாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஜோஷியின் தனிப்பட்ட மொபைல் எண்ணும் வெளியானது. இது தனியுரிமை மீறல் என்று  ஜோஷி கோபமாக, டிவிட் செய்தார்.  அதுபோல மற்றொரு டிவிட்டில்,  தனது பெயரை இழிவு படுத்துவதை கண்டித்து, தனது பெயர் ஜோஷி மீண்டும் டிவிட் போட்டார். தான் எப்போதும் உயர்ந்தவன்தான் என்றும்,  இந்திய அரசியல் அமைப்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் என்றும், ‘ஜோஷி’ என்பது என் குடும்பத்தின்  ஒரு பகுதியாகும். ஆனால் , என் உண்மையான ஜோஷ் இந்தியாவின் அரசியலிலிருந்து வந்தது, யூரி படத்தில் இருந்து வந்தது அல்ல  என்று காட்டமாக கூறியிருந்தார்.

இந்த விவகாரங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஜோஷியை மத்திய அரசு தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி