மேகதாது அணை விவகாரம்: தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி கர்நாடகாவுக்கு மோடி அரசு ஒப்புதல்

டில்லி:

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்ததால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குமாரசாமி தலைமயிலான கூட்டணி அரசு பதவி ஏற்றதும், கர்நாடக அரசு தரப்பில் இருந்து, மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக வரைவு அறிக்கை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த வரைவு அறிக்கைக்கு  மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக  தமிழகம் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் சமயங்களில் காவிரியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் பெருமளவு வீணாக கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி பாய்ந்தோடி வரும் மேகதாது என்ற மலைப்பகுதியில் புதிய அணை கட்டுவோம் என்று கர்நாடக மாநில பல ஆண்டுகளாக கூறி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாளம் கூட்டணி அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து.  பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மேகதாது அணையை கட்டுவோம் என்று முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.  அதற்கான மேல்நடவடிகைகளில் தீவிரமாக ஈடுபட்ட  கர்நாடக மாநில அரசு, மேகதாது  அணைக்கட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை தயார செய்து கடந்த செட்படம் மாதம் முதல் வாரத்தில்  மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து மேல் நடவடிக்கையாக கடந்த செப்டம்பர் 10ந்தேதி கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேவகவுடா உள்பட கர்நாடக மாநில அரசு  அதிகாரிகள்  டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை  நேரில் சந்தித்து பேசினர். அப்போதே இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என நம்பப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவகுமாரும் பேசியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 10ந்தேதி கர்நாடக முதல்வர் மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் ஆலோசனை

கர்நாடக அரசின் மேகதாது செயல் திட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் மட்டுமின்றி தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தும், திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கக்கூடாது என வற்புறுத்தியும் கடிதம் எழுதி இருந்தார்.

கர்நாடக அரசின் இந்த செயல்திட்டம் குறித்து, தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு மத்திய நீர்வளத்துறை கேட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு பதிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில், மேகதாது அணை செயல்திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால்,  தமிழகத்திற்கு வரும் காவிரி தண்ணீர் தடுக்கப்பட்டு வரும் என்றும், இதனால், காவிரியை நம்பி உள்ள டெல்டா பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணை செயல்திட்டம்:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு, மத்திய அரசிடம் கர்நாடக அரசு செயல்திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.  அதில்,  சுமார், 5,912 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்படும் என்றும், இதன் காரணமாக சுமார் 66 டிஎம்சி தண்ணீர் வரை தேக்கி வைக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Modi Government to approves Karnataka's Meghadhadu dam plan project, மேகதாது அணை விவகாரம்: தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி கர்நாடகாவுக்கு மோடி அரசு ஒப்புதல்
-=-