பொய்யான வாக்குறுதி கொடுத்தே ஆட்சியை பிடித்தோம்: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஒப்புதல்

டில்லி:

பொய்யான வாக்குறுதி கொடுத்தே 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தோம் என்று  மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவர் பேசிய தொலைக்காட்சி பேச்சின் வீடியோ பதிவை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி பாஜகவின் முகத்திரையை கிழித்து உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தற்போதைய பிரதமர் மோடி, மக்களை ஏமாற்றும் வகையில்  நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார்.

நாட்டில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு, ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும்,  எளிமையாகும் வரி நடைமுறைகள், வரி என்ற தீவிரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, மக்களின் கவலைகள் தீர்க்கப்படும், வரி நடைமுறைகள் எளிமையாக்கப்படும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக் கென தனியாக தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்  வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்,

இந்தியாவின் ஜீவ நதிகள் நதிகள் இணைப்பு, சாத்தியமுள்ள இடங்களில் நதிகள் இணைக்கப் படும், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்.

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.சில்லரை வணிகம் தவிர மற்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்பது உள்பட ஏராளமான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியை பிடித்து.

ஆனால், மோடி தெரிவித்தபடி பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் ஏட்டளவிலேயே உள்ளது.

ஆனால், மோடி , பண மதிப்பிழப்பு கொண்டு வந்து மக்களை கடுமையாக இன்னலுக்கு ஆளாக்கினார். டிஜிட்டல் பண பரிவர்த்தனை என அலைக்கழித்து வருகிறார். கருப்பு பணத்தை ஒழிப்பாக கூறி பாஜகவினரையே தொழிலதிபர்களாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்சிரி,  மோடி அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகள் மீது கட்டப்பட்டது என்பதாக கூறி, தாங்கள் பொய் கூறி மக்களை ஏமாற்றியே ஆட்சியை பிடித்தோம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

நாங்கள் ஒருபோதும் அதிகாரத்திற்கு வர முடியாது என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். எனவே, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை  மக்களுக்குக அள்ளி வீசினோம். அவர்களும் அதை நம்பி எங்களுக்கு வாக்களித்தார்கள்.  இது எதிர்பாராத விதமாக நாட்டு மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்தது.   இப்போது அந்த வாக்குறுதிகளை மக்கள் நினைவு படுத்துகிறார்கள்… ஆனால்… நாங்கள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து செல்கிறோம்….  என்று கூறினார்.

சமீபத்தில், நானே படேகருடனான சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதை தெரிவித்தார். 

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.