ஸ்ரீநகர்:

மோடி அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டால் காஷ்மீர் மக்கள் முழுமையாக பிரித்து கிடக்கின்றனர் என்று ன்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டினார்.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ‘தி பிரின்ட்’ இதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கடைசி துப்பாக்கியின் சத்தம் ஓயும் வரை பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு காத்திருக்க போகிறதா?. இந்த நிலைப்பாட்டை தான் மத்திய அரசு எடுத்துள்ளது. பிரச்னை இருக்கும் சமயம் தான் பேச்சுவார்த்தை நடத்தவதற்கான நேரம். பிரச்னைகள் காணாமல் போன பின்னர் பேச்சுவார்த்தை என்பது சரியல்ல.

தினமும் போராட்டம் நடந்து வருகிறது. தடைகள் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட பொதுமக்களோ அல்லது வேறுசிலரோ காயமடைந்த சம்பவங்கள் நடந்தது. இப்போது பேசவில்லை என்றால் எப்போது பேச போகிறீர்கள்?. இத்தகைய செயல்பாட்டால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அவர்களின் 50 சதவீத கடுமையான நிலைப்பாட்டால் எதையும் இது வரை சாதிக்கவில்லை’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘மக்களை பிரித்து விடக் கூடிய செயலை தான் மத்திய அரசு செய்கிறது. அதனால் முதல்வர் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுளளது. இதைவிட மோசமானது எதுவும் இருக்க முடியாது.

ஹூரியத் மாநாடு என்பது தற்போதைய சூழ்நிலைக்கு தொடர்பு இல்லாமல் உள்ளது. வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் கொண்டு வந்த பேச்சுவார்த்தை மூலமான முயற்சி தான் இதற்கு தீர்வை ஏற்படுத்தும். மாநிலத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு இரண்டு கூட்டணியினர் மத்தியில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான் காரணம்.’’ என்றார்.

உமர் அப்துல்லா தொடர்ந்து கூறுகையில், ‘‘அழிவு பாதையில் செல்லும் காஷ்மீரை மீட்க அவர்கள் ஒரு கல்லை கூட திருப்பி வைக்கவில்லை. இரு தரப்புக்கும் இதில் விருப்பம் இல்லாததையே இது காட்டுகிறது. சோபியான் சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு முறைக்கு இரு முறை தர்கரீதியான முடிவை எடுத்து பின்னர் உச்சநீதிமன்றத்தை அடைந்தவுடன் பல்டி அடித்த முதல்வரை தான் பார்க்கமுடிகிறது.

கூட்டணி கட்சிகள் பல்வேறு பிரச்னைகளில் மாறி மாறி பேசுகின்றன. ராணுவ மேஜர் விவகாரம் மற்றும் சத்துபா பாலியல் வழக்கு போன்றவை இதற்கு உதாரணம்’’ என்றார்.