கொரோனா நேரத்தில் மோடி அரசின் சாதனைகள்  :  ராகுல் காந்தி கேலி

டில்லி

கொரோனா காலத்தில் மோடி அரசு செய்துள்ள சாதனைகள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டிவிட்டரில் கேலியாக பதிவு இட்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா தொற்று அள்வுக்கு மீறி பரவி வருகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பலமுறை அரசுக்கு பல யோசனைகள் தெரிவித்துளார்.

ஆனால் ஆளும் பாஜக அரசு எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது.

மாறாக மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தற்சார்பு எய்தி உள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டரில்

கொரோனா கால கட்டத்தில் அரசின் சாதனைகள்

பிப்ரவரி : நமஸ்தே டிரம்ப்

மார்ச் : மத்திய பிரதேச அரசு கவிழ்ப்பு

ஏப்ரல் : மக்களை மெழுகுவர்த்தை ஏற்ற வைத்தல்

மே : அரசின் 6 ஆம் ஆண்டு கொண்டாட்டம்

ஜூன் : பீகார் மெய் நிகர் பேரணி

ஜூலை : ராஜஸ்தான் அரசு கவிழ்ப்பு முயற்சி

இந்த சாதனைகளால் கொரொனா வுக்கு எதிரான போராட்டஙகளில் அரசு தற்சார்பு எய்தி உள்ளது

எனப் பதிந்துள்ளார்.