மோடி அரசு 325 நீதிபதிகளை நியமித்துள்ளது. : சட்ட அமைச்சர்

டில்லி

மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் வருடத்துக்குப் பின் 325 நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் பல புகார்களை நீதிமன்றத்தின் மீதும் மத்திய அரசின் மீதும் தெரிவித்திருந்தார்.   அதில் அவர் மோடி அரசு நீதிபதிகளை போதுமான அளவு நியமிக்கவில்லை எனவும் நீதிபதி கிருஷ்ணா பட் மீதான பாலியல் புகார் குறித்து சரியான விசாரணை நடைபெறவிலை எனவும் கூறி இருந்தார்.   இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். “ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் அளித்துள்ள புகார் கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டியது எங்கள் கடமை ஆகும்.   நீதிபதி கிருஷ்ணா பட் மீதான பாலியல் குற்றசாட்டுக்கு விசாரணையை ஒரு பெண் சட்ட அதிகாரி நடத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.   இது குறித்து அவர் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என ஏற்கனவே தலைமை நீதிபதி, பிரதமர், ஜனாதிபதி மற்றும் எனக்கு புகார்கள் வந்துள்ளன.

விரைவில் இந்த விவகாரத்தில் ஒரு நியாமான விசாரணையும் தீர்ப்பும் வழஙக்படும்.   அத்துடன் நான் இந்த விசாரணையை தாமதப்படுத்துவதாகக் கூறுவது மிகவும் தவறானதாகும்.   இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு பெண் நீதிபதி சம்மந்தப்பட்டிருப்பதால் இதை ஒரு மாவட்ட அளவிலான விசாரணை நடத்துவது முறை அல்ல.

நாங்கள் அரசு அமைத்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இது வரை பல நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 325 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   அவர்களில் 17 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகவும் மற்றவர்கள் பல படிகளில் கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   கூடுதல் நீதிபதிகள் மட்டும் சுமார் 250க்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.