புதுடெல்லி: கடந்த 2014-15 மற்றும் 2018-19 ஆகிய காலகட்டங்களுக்கு இடையிலான நிதியாண்டுகளில், எல்ஐசி நிறுவனம் சுமார் ரூ.10.7 லட்சம் கோடிகளை பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.

மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் மட்டும் இது நடந்துள்ளது. இந்த முதலீடுகளில் அதிகளவு நஷ்டததில் இயங்குவதாக கூறப்படும் வங்கிகளில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண மதிப்பிழப்பு உள்ளிட்ட தனது மோசமான பொருளாதார கொள்கைகளால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது மற்றும் பற்றாக்குறை பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது என்பதையும் நாடே அறியும்.

எனவே, இந்த மோசமான நெருக்கடியிலிருந்து சமாளிக்க எல்ஐசி நிறுவனத்தின் நிதியை, மோடி அரசாங்கம் பெருமளவில் சார்ந்திருந்தது என்ற அதிர்ச்சி உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் ரூ.10.7 லட்சம் கோடிகளை முதலீடு செய்ததன் மூலம், கடந்த 1956ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் துவக்கப்பட்டது முதல் எல்ஐசி நிறுவனம், இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.22.6 லட்சம் கோடிகள் என்றாகிறது. கடந்த 2013-14 நிதியாண்டின் முடிவில், பொதுத்துறை நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்த தொகை ரூ.11.9 லட்சம் கோடிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.