புதுடெல்லி:

கடந்த 18 ஆண்டுகால பிஎஸ்என்எல் வரலாற்றில், முதல்முறையாக 1.68 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா கூறும்போது, மோடி முதல் முறை மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதே நிலை நீடிக்கிறது.

கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக 1.68 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் ஜியோ தொலைத் தொடர்பு சேவையை ஊக்குவிக்கும் வகையில் பிஎஸ்என்எல் முடக்கப்பட்டு வருகிறது என்றார்.

பிஎஸ்என்என் தொழிலாளர் சங்க தலைவர் ஸ்வபன் சக்கரவர்த்தி கூறும்போது, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் பிஎஸ்என்எல் திணறுகிறது.

பிஎஸ்என்எல் பெற்ற கடன் தொகை ரூ.13 ஆயிரம் கோடியாக உள்ளது. வோடாபோன் பெற்ற கடன் தொகை ரூ.1.2 லட்சம் கோடியாகவும், ஏர்டெல் கடன் தொகை ரூ.1.13 கோடியாகவும், ஜியோ பெற்ற கடன் தொகை ரூ.2 கோடியாகவும் உள்ளது.

பிஎஸ்என்எல்-ஐ மட்டும் கடன் பெற ஏன் அனுமதிக்கவில்லை.

நிரந்தர ஊழியர்களின் நிலைமையே இவ்வாறு இருக்கும் போது, ஒப்பந்த தொழிலாளர்கள் நிலைமையை பற்றி நினைத்தே பார்க்க முடியவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனம் பொது நிறுவனமாக இருந்தும், பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்க பாஜக அரசு விரும்பவில்லை.

எங்கள் பிரச்சினைகளை சொல்லிவிட்டோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் திட்டமிடுவோம் என்றார்.