மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி:
க்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உங்கள் காரை ஒரு பெட்ரோல் பம்பில் மீண்டும் எரிபொருள் செலுத்தும் போது, வேகமாக உயரும் மீட்டரைப் பார்க்கும்போது, கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பைகளை காலி செய்து நண்பர்களுக் குகொடுக்கும் ஒரு பெரிய வேலையை மோடி அரசு செய்து வருகிறது! ”என்று பதிவிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ தாண்டிவிட்டது. இந்த உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதி, “கலால் வரியை ஓரளவு திரும்பப் பெறுவதன் மூலம் எரிபொருள் விலையை குறைக்க வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.