முப்படைகளுக்கும் தலைமை தளபதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி:

லைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முப்படைகளுக்கு ஒரே தளபதியாக,  தலைமை தளபதி பொறுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதனுடன் ராணுவ விவகாரத் துறை (Department of Military affairs)  எனும் புதிய துறையை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதியதாக நியமிக்கப்படும் தலைமை தளபதி இந்த துறைக்கு தலைவராக இருப்பபார் என்றும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை தளபதி பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முப்படைகளுக்கும் இணைந்த தலைமை தளபதிக்கு வருபவர்கள், 4 ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ள ஜெனரல்கள் மட்டுமே  தகுதியானவர்கள்.

தனிப்பட்ட முறையில், முப்படை தளபதிகளின் ஆலோசகள் இன்றி அவர்கள் எந்வொரு ராணுவ முடிவும் எடுக்கக்கூடாது 

புதியதாக தலைமை தளபதி பதவி  ஏற்பவர்களுக்கு 5 ஸ்டார் அந்தஸ்து வழங்கப்படும்

அவர்கள் முப்படை தலைவர் பதவி பணி ஓய்வுபெற்ற பின்பு அடுத்த 5 ஆண்டுகள் எந்தவொரு அரசு துறையிலோ, தனியார் துறையிலோ பணியாற்றக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விரைவில் புதிய தலைமை தளபதி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரிந்துரைகள், ஏற்கனவே கார்க்கில் போருக்கு பிறகு, 20 ஆண்டுகளுக்கு முன்பே, கே.சுப்பிரமணியம் கமிட்டி, மத்தியஅரசு பரிந்துரை செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

கே.சுப்பிரமணியம் என்பவர், தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், மறுசீரமைக்கப்பட்ட ரயில்வே வாரியம் அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் ஒரு தலைவர், நான்கு உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொத்தம் ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் என்றும்,  தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தயாரிப்பதற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக  மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

formally creates Chief of Defence Staff