மோடி அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது : மம்தா கண்டனம்

கொல்கத்தா

த்திய பாஜக அரசு மேற்கு வங்கத்தில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக கூறி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ நேரடி விசாரணைக்கு தடை விதித்துள்ளார். சிபிஐ அதிகாரிகள் தங்கள் சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் நியாயமான அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதால் இந்த தடை விதிக்கப்ப்பட்டுள்ள்தாக அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில காவல்துறை ஆணையர் ராஜிவ் குமார் மீது எழுப்பப்பட்டுள்ள புகாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று கொல்கத்தாவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றது. அங்கு அவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டு காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

சிபிஐ அதிகாரிகள் அனுமதி இன்றி வந்ததற்கு மம்தா பானர்ஜி கடும் கோபம் அடைந்துள்ளார். அவர் உடனடியாக காவல்துறை ஆணையர் இல்லத்துக்கு நேரில் வந்தார்.  மம்தா பானர்ஜி அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம், “பிரதம்ர் மோடியின் தூண்டுதலின் பேரில் சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் மொடி அராஜகத்தை கட்டவிழுத்து விட்டுள்ளார்” என தெரிவித்தார்.