60 விவசாயிகள் மரணம் பற்றி கவலைப்படாத மோடி அரசு: ராகுல் காந்தி சாடல்

டெல்லி: போராட்டங்களில் 60 விவசாயிகள் இறந்தபோது வராத கவலை டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வந்திருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் நடந்து வரும் போராட்டம் முற்று பெறவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் வேளாண் சட்ட போராட்டத்தில் 60 விவசாயிகள் உயிரிழந்த போது மத்திய அரசுக்கு வராத கவலை டிராக்டர் பேரணியால் வந்துள்ளது என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர் துறந்த போது மோடி அரசு வெட்கப்படவில்லை. ஆனால் இப்போது டிராக்டர் பேரணிக்கு கவலைப்படுகின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.