Random image

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ரூ.5, 812 கோடியை மாநிலங்களுக்கு தராமல் இழுத்தடிக்கும் மோடி அரசு? ஒரு பார்வை!

புதுடில்லி: நவம்பர் 25, 2019 நிலவரப்படி அனைத்து மாநிலங்களுக்கும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம்) ஊதியமாக மத்திய அரசு, ரூ.5, 812 கோடியைத் தரவேண்டியுள்ளது

நுகர்வோர் செலவினங்கள், 2017-18 இன் நான்கு தசாப்தங்களில் முதன்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதன் பின்னணியில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பண்ணை வருமானத்தில் பெரும்படியான வீழ்ச்சியால். 2015-2016 இல் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.  இந்த ஆண்டு வேலைவாய்ப்பு திட்டத்திற்காக மோடி அரசு, ரூ. 60,000 கோடியை ஒதுக்கியிருந்தது.

கிராம அபிவிருத்தி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆந்திரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களுக்கு அதிகப்படியான தொகை மத்திய அரசால் தர வேண்டியுள்ளது

மத்திய அரசு, ஆந்திராவிற்கு 7677 கோடி ரூபாயும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திற்கு 683 கோடியும், ராஜஸ்தானுக்கு 633 கோடியும், பீகாரிற்கு 378 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு 329 கோடியும், கேரளாவுக்கு 203 கோடியும், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு 125 கோடியும் தரவேண்டியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில், கர்நாடகாவுக்கு (ரூ 603 கோடி) அடுத்து, மணிப்பூருக்கு (ரூ 371 கோடி), அசாமுக்கு (ரூ 205 கோடி) மற்றும் ஜார்க்கண்டுக்கு (ரூ 170 கோடி) கோவாவிற்கு (ரூ 44 லட்சம்) என மத்திய அரசு தரவேண்டியுள்ளது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள பல்வேறு தரவுத் தொகுப்புகளின் பகுப்பாய்வு தரவுகளிலும் வேறுபாடுகள் இருப்பதைக் காட்டுகிறது. ‘ஒரு பார்வையில்‘(At a glance] என்கிற ஒருபிரிவில், ரூ. 53,570 கோடியை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது இருக்க முடியாது. ஏனெனில், தற்போது கிடைக்கக்கூடிய மொத்த நிதிகளின் எண்ணிக்கை, 56,271 கோடியாக உள்ளது என்றும் கூறியுள்ளது. இந்த ஆண்டிற்கான மொத்த எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் நிதி, 60,000 கோடி என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

கட்டணம் செலுத்தும் முறை மையப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மாநில அரசுகள் விரும்பினாலும் அவர்களால் தொழிலாளர்களுக்குப் விரும்பினாலும் பணம் கொடுக்க முடியாது.

வேலை வாரம் முடிந்த 15 நாட்களுக்குள் தொழிலாளி ஊதியம் பெற வேண்டும் என்றும், இது தோல்வியுற்றால் தாமதத்திற்கு ஒரு நாளைக்கு தாமத இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.

இருப்பினும், தாமதத்தை அரசாங்கம் அரிதாகவே ஒப்புக்கொள்கிறது; அதற்கு பதிலாக பெரும்பாலும் அரசாங்கம் தாமதத்தை தவறாக சித்தரிக்கிறது.

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் ஊதியம் 16-17 நிதியாண்டிற்கான தாமதம் குறித்து ராஜேந்திரன் நாராயணன், சக்கினா தோராஜிவாலா மற்றும் ராஜேஷ் கோலன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் குறிப்பில், இத்தகைய தாமதங்களுக்கு முக்கிய காரணங்களாக, “உள்கட்டமைப்பு தடைகள், நிர்வாக இணக்கமின்மை மற்றும் நிதி இல்லாமையே“, என அரசு கூறுவதாக உள்ளது.

2016–2017 நிதியாண்டில் 10 மாநிலங்களில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை அவர்கள் ஆய்வு செய்திருந்தனர். 21% பணப்பட்டுவாடா மட்டுமே சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ளன என்பதையும், மத்திய அரசு மட்டும் சராசரியாக 50 நாட்களுக்கு மேல் மின்னணு முறையில் ஊதியத்தை மாற்றுவதற்கு கால அவகாசம் எடுத்துக் கொண்டிருந்ததை அவர்கள் கவனித்திருந்தனர். மொத்தத்தில், செலுத்த வேண்டிய உண்மையான தாமத இழப்பீடு சுமார் ₹ 36 கோடியாக உள்ளது.

அனைத்து பொறுப்புகளையும் மாநிலங்கள் மற்றும் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மீது பொருத்த அரசாங்கம் விரும்புகிறது என்று அறிக்கை கூறுகிறது.

‘தாமதங்கள்’பற்றிய அரசாங்கத்தின் வளைந்த கண்ணோட்டம், தொழிலாளர்களுக்கு முழு நாட்களுக்கும் இழப்பீடு வழங்கப்படாது என்பதோடு, மத்திய அரசு எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது விடுவித்துக் கொள்வதாகவும் உள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) கசியவிட்ட நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பு 2011-12 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2017-18 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சராசரி மாதச் செலவில் 8.8% சரிவு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் நேரத்தில் எம்.ஜி. என். ஆர். இ. ஜி. எஸ் உட்செலுத்தும் இந்த பின்னிணைப்பும் வருகிறது.

பிசினஸ் ஸ்டாண்டர்டில் முதன்முதலில் வெளிவந்த இந்த அறிக்கை, நான்கு தசாப்தங்களில் நுகர்வோர் செலவினங்கள் உண்மையான அளவில் குறைந்து வருவது இதுவே முதல் முறை என்று கூறுகிறது.

“அரசாங்கம் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களை தொந்தரவு செய்வது உண்மையில் குற்றமாகும். முதலாவதாக, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் ஊதியங்கள் சந்தை நிலவரத்தில் பாதியே; இந்த ஊதியங்கள் அதிகரிகவில்லை.  இப்போது, ​​ஊதியம் வழங்குவதில் இந்த தாமதம் அதிகமான மக்களை வறுமையில் தள்ளும்.

ஏனெனில், இதன் பொருள், தேவையின் அளவு குறைகிறது என்பதாகும்.  இது அவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும்”, என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தில் பணிபுரியும் ஹிமான்ஷு அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அரசாங்கத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்து பேசிய ஹிமான்ஷு, ‘இந்த அரசாங்கம் ஏழைகளை கவனிப்பதில்லை“, என்று வாதிட்டார்.

“இது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் ஊதியங்கள் மட்டுமல்லாது கிராமப்புற பொருளாதாரத்தையும் பாதிக்கும். அனைத்து துறைகளும் நெருக்கடியில் உள்ளன. “மேலும் அரசாங்கம் போதுமான அளவு செய்து வருகிறது. அவர்கள் ஏழைகளின் கைகளில் அதிக பணம் புழங்கச் செய்ய வேண்டும். அதைச் செய்ய எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் ஒரு வழி, அதன் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் வேலை நாட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அவர்கள் உடனடியாக ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் வேலை செய்தவர்கள் தங்கள் செலவுக்கு பணம் வைத்திருப்பார்கள்”, என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆண்டு அக்டோபரில், தொழிலாளர் பணியகத்தின் தரவு, கிராமப்புற ஆண் பொது விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் ஜூலை மாதத்தில் 3.4% குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

கூடுதலாக, அதே மாதத்தில் விவசாயத் தொழிலாளர்களின் நுகர்வோர் விலை பணவீக்கம் 6.21% ஆக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 2.04% ஆக இருந்துள்ளது.

பணமதிப்பிழப்பு மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அவசரமாக செயல்படுத்தப்படுவது கிராமப்புற மந்தநிலையை மோசமாக்கியுள்ளது.

72 மணி நேரத்திற்கு முன்னர் ஊரக வளர்ச்சி அமைச்சர் மற்றும் அமைச்சகத்தின் பல செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கேள்விகள் அடங்கிய அறிக்கை ஒப்புதல் சான்றோ பதில்களோ எதுவுமில்லாமல் உள்ளது. இந்தக் கதை ஒரு பதிலைப் பெறும்போது மீண்டும் புதுப்பிக்கப்படும்.