தனியார் சரக்கு ரயில்கள் திட்டம் – பாதைகளை ஏலம் விடத்தயாராகும் மோடி அரசு!

--

புதுடெல்லி: இந்திய சரக்கு ரயில் போக்குவரத்தில் தனியார்களை ஈடுபடுத்தும் வகையில் ஏல நடவடிக்கைகளைத் துவங்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஏல நடவடிக்கை கொரோனா அச்சுறுத்தலால் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தனியார் பயணிகள் ரயிலுக்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு காரணமாக, தனியார் சரக்கு ரயிலையும் இயக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, முற்றிலும் சரக்குப் போக்குவரத்திற்காக மட்டுமே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மட்டுமே தனியாருக்கு ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பயணிகள் ரயில் போக்குவரத்து, வரும் 2023ம் ஆண்டில் தனது போக்குவரத்தை துவங்கும்போது, சரக்கு ரயில் போக்குவரத்தும் துவங்குமாம். தற்போதைய நிலையில், சரக்கு ரயில்களில், தனியார் கண்டெய்னர் ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட அளவில் கடந்த 2006ம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.