மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை: உ.பி. ஐஏஎஸ் அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி:

மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மை தேவை என உத்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் பிரவீர் குமார், கண்காணிப்பு என்ற பெயரில் ஐஏஎஸ் அதிகாரிகளை, கார்பரேட் நிறுவனங்களைப் போல் ஒளி புகாத கருப்புப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசு பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் போது, அதிகபட்ச வெளிப்படைத் தன்மை வேண்டும். வெளிப்படையற்ற தன்மை இருந்தால், இயற்கை நீதிக்கு எதிராக அமையும். இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

மத்திய அரசு பணிக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டது குறித்தோ அல்லது நிராகரிக்கப்பட்டது குறித்தோ ஐஏஎஸ் அதிகாரிக்கு தெரியவரும் என்றார்.