ஆந்திர முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

மராவதி

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சிறப்பு அந்தஸ்து கோரியதை முதலில் தருவதாக சொல்லிய மத்திய அரசு பிறகு மறுத்து விட்டது.  அதையொட்டி ஆந்திர மாநில ஆளும் கட்சியான தெலுங்கு தேசம்  மத்திய அரசில் இருந்து விலகியது.   பாஜகவுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது.

கடந்த 20ஆம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாள் வந்தது.    அன்று அவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்,   அவர், “ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுகாருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  அவர்  நல்ல ஆரோக்யத்துடனும் நீண்ட நாள் வாழவும் பிரார்த்திக்கிறேன்” என பதிந்துள்ளார்

அதற்கு சந்திரபாபு நாயுடு, “தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.   இப்போது தான் நான் எனது ஒரு நாள் உண்ணாவிரதமான தர்ம போராட்ட விரதத்தை முடித்துள்ளேன்.    ஆந்திர பிரதேசத்தின் 5 கோடி மக்களுக்கு நீதி கேட்கிறேன்”  என பதில் அளித்துள்ளார்