பழைய படம்

டில்லி

திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதலவருமான கருணாநிதி இன்று தனது 95ஆம் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.   அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்துச் செய்தி பதிந்துள்ளார்.

பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து செய்திகள் பதிந்துள்ளார்.  அந்த செய்தியில் மோடி, “கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.    கருணாநிதி ஒரு சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர் ஆவார்.   நம் நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதி ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும்” என பதிந்துள்ளார்