புதுடெல்லி: பாகிஸ்தானின் தேசிய நாளை ஒட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இதுகுறித்து தெரிவிக்கப்படுவதாவது; தீவிரவாதத்தை களைந்து, அமைதியையும் வளத்தையும் உருவாக்கி, இந்த துணைக்கண்டப் பிராந்தியத்தை செழிப்படையச் செய்வதற்காக, இருநாட்டு மக்களும் உழைக்க வேண்டிய நேரமிது என்று அந்த வாழ்த்துச் செய்தியில் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்திக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பாகிஸ்தான் தேசிய நாளை ஒட்டி, டெல்லியிலுள்ள அந்நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை, இந்தியா புறக்கணித்தது. காஷ்மீரில் செயல்படும் சில சர்ச்சைக்குரிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதற்கு அழைக்கப்பட்டிருந்ததால், இந்தியா சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி