மோடியால் இந்திய பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது – ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை

த்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழில் துறை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் எழுதிய  அச்சமற்ற எதிர்ப்பு என்ற நூலின் வெளியீட்டு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது.  நூலை அறிமுகப்படுத்தி பேசிய ப.சிதம்பரம்,
மக்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கும் வகையில், அச்சமில்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.  பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது மிகவும் மோசமான திட்டமாகும். மத்திய அரசின் நிதித்துறை செயலாளர், தலைமை பொருளாதார ஆலோசகர் என யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் மத்திய அரசு திடீரென இந்த நடவடிக்கையை எடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.

இந்த நடவடிக்கையால் மக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கருப்புப்பணம் மீட்கப்படும், கள்ளநோட்டுப் புழக்கம் தடுக்கப்படும் என பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேறவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

மேலும், வீடு, வாகனத்துக்கான கடன் அதிகரித்துள்ளது என்றும் தொழில்துறை மிகவும் பாதிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.