பாக்., விவகாரத்தில் மோடியிடம் ஆழ்ந்த சிந்தனை இல்லை…ராகுல்காந்தி

லண்டன்:

பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் ஆழ்ந்த சிந்தனை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள கல்வி நிறுவன நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆழ்ந்த சிந்தனை இல்லை.

பாகிஸ்தான் விவகாரத்தை கையாளுவது என்பது மிகக் கடினம். பாகிஸ்தானில் மேலாதிக்க அதிகாரம் எந்த ஒரு அமைப்பிடமும் இல்லை. அவர்கள் ஒத்துப் போகக் கூடிய ஒரு அமைப்பை உருவாக்கும் வரையில் நாம் காத்திருக்க வேண்டும்’’என்றார்.