இளவரசர் இந்தியா வருகை- மோடி மதிய உணவிற்கு அழைப்பு
கேம்பிரிட்ஜ் இளவரசர் இந்தியா வருகை– மோடி மதிய உணவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஏப்ரல் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முதன்முதலில் இந்தியாவிற்கு வருகைத் தரும் கேம்பிரிட்ஜ் டியூக் (சீமான் ) மற்றும் டச்சஸ்(சீமாட்டி) அவர்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதிய உணவிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அரச தம்பதியினர் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் வருகையை அறிவித்த வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் , அவர்கள் ஏப்ரல் 10 ம் தேதி மும்பை வந்தடைவர் என்றார்.
“இந்தியாவிற்கும் முதன்முதலாக வருகைத் தரும் பிரபுவையும் சீமாட்டியையும் வரவேற்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்” என்றும் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடனான தொடர்பு இந்தியா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்தும் ஒரு “ஒருங்கிணைந்தஉள்ளடக்கம்” எனவும் கூறினார்.
பிரதமர் அரச தம்பதியினருக்கு இங்கே மதிய உணவு நடத்துவார் என்றும் அவர் கூறினார்.
இங்கேயுள்ள பிரிட்டிஷ் உயர் ஆணையத்தின் படி, பிரபுவும் சீமாட்டியும் மும்பையில் வந்திறங்கியப் பின்னர் அவர்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்புகொடுக்கப்படும் அதாவது இதில் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், ஐஸ்வர்யா ராய், ரிஷி கபூர், ஹ்ரித்திக் ரோஷன், ஃபர்ஹான் அக்தர் மற்றும் கிரிக்கெட் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்.
பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை மற்றும் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் ஆகியவையுடன் இணைந்து பிரிட்டிஷ் உயர் ஆணையம், 200 பேர் அடங்கிய இந்தியாவின் உயர்மட்ட சினிமா, விளையாட்டு மற்றும் வர்த்தக பிரமுகர்களுக்கு ஏப்ரல் 10 ஞாயிறன்று ஒரு பிரம்மாண்டமான வண்ணமிகு வரவேற்பு மற்றும் இரவு உணவை ஏற்பாடு செய்யப்போவதாக பிரிட்டிஷ் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.