“மோடி.. கட்டிப்புடி”: காங்கிரஸ் வெளியிட்ட மீம்ஸ் வீடியோ

டில்லி:

வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்பது குறித்து கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

பிற நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது கட்டிப்பிடித்து வரவேற்பது பிரதமர் மோடியின் வழக்கம். இதை கேலி செய்யும் காங். கட்சி, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போதும், வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின் போதும் அவர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்ற காட்சிகள் கிண்டலாக பதிவேற்றப்பட்டுள்ளன.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும் காமெடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ..