ஒற்றுமைக்கான ஓட்டம் : மோடி துவக்கி வைத்தார்.

டில்லி

ர்தார் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒற்றுமைக்கான ஓட்டம் என்னும் நிகழ்வை மோடி துவக்கி வைத்தார்.

இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லப் பாய் படேலின் 142 ஆவது பிறந்த தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி ஒற்றுமைக்கான ஓட்டம் என்னும் என்னும் ஓட்ட நிகழ்வு இன்று டில்லியில்  மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் இருந்து இந்தியா கேட் வரையிலான 1.5 கிமீ தூரத்துக்கு நடை பெற்றது.

இந்த ஓட்டத்தில் சர்தார் சிங், தீபா கர்மாகர், சுரேஷ் ரெயினா, கர்ணம் மல்லேஸ்வரி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.   ஓட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, “சர்தார் வல்லப் பாய் படேல் பிறந்த இந்த தினத்தில் அவருக்கு நாம் வணக்கம் செலுத்துவோம்.  இந்தியாவுக்கு அவர் செய்த சேவைகளும்,  இந்த நாட்டை இணைக்க அவர் ஆற்றிய தொண்டும் யாராலும் மறக்க இயலாதவை.   இன்று ஏக இந்தியாவாக விளங்கும் இந்தியாவை அமைக்க சுதந்திரம் அடைந்த உடன் அவர் ஆற்றிய தொண்டுகள் நாட்டு மக்கள் அனைவரும் பெருமை கொள்ளத் தக்கது” என கூறினார்.