இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு தாய்லாந்து தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு

பாங்காக்

ந்தியாவில் தொழில் தொடங்க வர வேண்டும் எனத் தாய்லாந்து தொழிலதிபர்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16 ஆம் ஆசியான் இந்தியா உச்சி மாநாடு நடைபெறுகிறது.   14 ஆம் கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் 3 ஆம் பிராந்திய பொருளாதார மாநாடு நாளை நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரிய ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

பிரதமர் மோடி இதில்கலந்துக்கொள்ள பாங்காக் சென்றுள்ளார்.   நேற்று அவர் அங்கு தாய்லாந்து  மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.   அப்போது அவர் தமிழில் பேசியதையும் திருக்குறளைச் சொன்னதும் வரவேற்பைப் பெற்றது.

அத்துடன் அவர் அந்நாட்டுத் தொழிலதிபர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.  அப்போது அவர் இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மோடி தனது உரையில், “உலகில் முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும் மிகவும் சிறந்த இடம் இந்தியா ஆகும். இந்திய நாடு தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. தற்போது இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வ்ந்த 5 ஆண்டில் நடுத்தர மக்கள் மீதான வரிச்சு மையைக் குறைத்துள்ளோம். இந்தியாவுக்கு தற்போது வரும் வெளிநாட்டுப் பயணிகள் பாதுகாப்பாக உணர்வதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில்  பாஜக அரசு பொறுப்பேற்றபோது இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்த நிலையில், 5 ஆண்டுகளில் அது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்தது” எனக் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி