வாஷிங்டன்,

ந்தியாவில் தொழில் தொடங்க வருமான அமெரிக்க தொழில்அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

மூன்று நாடு பயணமாக வெளிநாடு சென்றுள்ள மோடி நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு பிரபலமான தொழில்நிறுவன அதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவுவதாகவும், அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த சூழலை தமது அரசு ஏற்படுத்தி வருவதாகவும், இதுவரை 7 ஆயிரம் சீர்திருத்தங்களை தமது அரசு மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த  மோடி, இந்தியாவின் வளர்ச்சியால் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பயன்பெறும் என்றார்.

மேலும் வரும் ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஒரே விதமான ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதனால் இதுவரை இருந்து வந்த வரிசிக்கல்களுக்கு முடிவு ஏற்படும் எனவும் மோடி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில்  அமேசான், ஆப்பிள், வால்மார்ட், ஜான்சன் அன்ட் ஜான்சன் என 600 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.