ராட்லாம், மத்திய பிரதேசம்

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது மத்தியப் பிரதேச பயணத்தில் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச மாநில கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக உள்ளார். அவர் காங்கிரஸ் செயலர் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தற்போது மத்தியப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது மாநிலத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு ஊடக செய்தியாளருக்கு பேட்டி அளித்திருதார். அப்போது தமது புகழை யாரும் குலைக்க முடியாது எனவும் இந்த புகழ் அவருடைய 45 வருட தவத்தினாலும் துறவு வாழ்ககையாலும் கிடைத்தது என கூறி உள்ளார்.

இது குறித்து பிரயங்கா காந்தி தனது மத்திய பிரதேச மாநிலத்தில் ராட்லம் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், “பிரதமர் மோடி தம்மை துறவி என்றும் தவம் செய்தவர் எனவும் கூறிக் கொள்கிறார். தவம் செய்பவர்கள் கோபம், வெறுப்பு மற்றும் பிடிவாதம் ஆகியவைகளை துறந்த பிறகே துறவி ஆகின்றனர். ஆனால் மோடியின் விஷயத்தில் அவர் இவைகளில் எதையுமே துறக்காமல் துறவி ஆகி உள்ளார்.

மோடியின் தொகுதியான வாரணாசியில் அவர் தனது பிரசாரத்தின் போது அங்கிருந்த ஏழைகளையும் விவசாயிகளையும் சந்தித்திருக்க வேண்டும். தனது தவத்தின் மூலம் அவர்களின் குறைகளை நீக்கி இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பழங்குடியினர் நலனுக்கும் அவர் எதுவும் செய்யவில்லை. அவர்களை காப்பதாக கூறிய இந்த துறவியே அவர்களுக்கு கடும் துயரத்தை அளித்துளார்.

கடந்த 21014 ஆம் வருடத்துக்கு பிறகு நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வெறும் விளம்பரத்தைக் கொண்டே மோடி ஆட்சியை நடத்தி வருகிறார். அவர் தம்மை காவலர் எனவும் பெரிய தேச பக்தர் எனவும் துறாவி எனவும் சொல்லிக்கொள்கிறார். ஆனால் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை காக்கவில்லை. அவர்க்ளுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. அதை விடுத்து பழைய வாக்குறுதிகளை மறந்து விட்டு புதிய வாக்குறுதிகளை அளித்து வருகிறார்” என தெரிவித்துள்ளார்.