மோடி அரசியல் இடை தரகராக செயல் படுகிறார் : மு க ஸ்டாலின்

ரூர்

மிழக அரசியலில் பிரதமர் மோடி ஒரு இடைத் தரகராக செயல்படுவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று கரூரில் சமீபத்தில் திமுக வில் இணைந்த முன்னாள் அதிமுக அமைசர் செந்தில் பாலாஜி ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.   அந்த கூஉட்டத்தில்  ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.     மக்கள் கூட்டம் மிகவும்  அதிகமாக இந்த கூட்டத்தில் காணப்பட்டது.  திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினார்.

மு க ஸ்டாலின் தனது உரையில், “நான் மோடியை ஒன்று கேட்கிறேன்.  ஜெயலலிதா மறைவுக்குப் பின் நீங்கள் அந்த கட்சியில் பிளவு ஏற்படுத்தினீர்கள்.  இதன் மூலம் அதிமுக எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளாக  பிரிந்தது.   அதன் பிறகு நீங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து அந்த அணிகளை இணைத்தீர்கள்.

கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் உங்கள் வேலையா?  நீங்கள் செய்தது ஒரு அரசியல் இடைத்தரகர் பணி தானே தவிர இந்தியப் பிரதமரின் பணி அல்ல.     நான் கருணாநிதியின் மகன்.  எதையும் சாட்சி இன்றி கூற மாட்டேன்.  நான் தமிழக அரசை கிரிமினல் அரசு என சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏன் என் மீது வழக்கு தொடரவில்லை? “ என கேள்வி எழுப்பி உள்ளார்.