மோடி பல சுதந்திர அமைப்புகளை விழுங்கும் அனகோண்டா : ஆந்திர நிதி அமைச்சர்

மராவதி

மோடி ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐ போன்ற அமைப்புக்களை விழுங்கும் அனகோண்டா என ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமலா ராமகிருஷ்ணுடு விமர்சித்துள்ளார்.

இந்த மாதம் 1 ஆம் தேதி டில்லியில் காங்கிரஸ் மற்றும் தெலுவ்கு தேசம் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி முடிவானது. இந்த கூட்டணி தற்போதைய தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் இருந்து தொடங்க உள்ளது. கூட்டணி முடிவுக்குப் பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து பேட்டி அளித்தனர்.

அந்த பேட்டியின் போது நாயுடு தேசத்தை காக்கவும் ஜனநாயக நலனுக்காகவும் காங்கிரசுடன் கூட்டனி அமைத்ததாக தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து எதிர்கட்சிகளையும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற சுதந்திர அமைப்புக்களில் மத்திய அரசு தலியிடுவதாக குற்றம் கூறினார்.

ஆந்திர மாநில நிதியமைச்சரான யனமலா ராமகிருஷ்ணா நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரசை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ராமகிருஷ்ணுடு பதில் அளித்தார்.

தனது பதிலில் ராமகிருஷ்ணுடு, “எந்தக் கட்சிக்கும் எதிராக தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்படவில்லை. சர்வாதிகாரம் மற்றும் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராகவே தொடங்கப்பட்டது. அந்த வகையில் பிரதமர் மோடி என்னும் அனகோண்டா பாம்பை விட மோசமான சர்வாதிகாரி யாரும் இல்லை.

அனகோண்டா என்னும் பெரிய மலைப்பாம்பு எதையும் விழுங்கி விடும் தன்மை கொண்டது. அதே போல பிரதமர் மோடி சுதந்திர அமைப்புக்களான சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்றவைகளை விழுங்கி வருகிறார்.” என தெரிவித்துள்ளார்.
இந்த விமர்சனம் அரசியல் வட்டாரங்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.