மோடி பொய்களின் கலைக்களஞ்சியம் : முன்னாள் மாணவர் தலைவர் வர்ணிப்பு

மும்பை

பிரதமர் மோடியை பொய்களின் கலைக்களஞ்சியம் என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் வர்ணித்துள்ளார்.

ஜவகலல் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார். இடது சாரி ஆதரவாளர் என அறியப்படும் கன்னையா குமார் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2016 ஆம் ஆண்டு இவரும் இவர் தோழரும் நாட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதாக தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது

ஆங்கிலத்தில் என்சைக்ளோபீடியா என அழைக்கப்படும் கலைக்களஞ்சியம் பல தகவல்களின் தொகுப்பாகும். சமீபத்தில் மும்பையில் அகில இந்திய தொழில்நுட்ப அறிஞர்கள் சம்மேளனம் நடந்தது. அதில் கன்னையா குமார் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “பிரதமர் மோடி பொய்ச் செய்திகளால் மக்களை ஏமாற்றும் ஒரு போலி பிரதமர். அவர் பொய்களின் கலைக் களஞ்சியம்.

நான் இந்த நூற்றாண்டு இளைஞன். எனக்கு என்னுடைய நியாயங்களும் தர்மங்களும் என்னவென்று முடிவு செய்ய தெரியும். எனது உரிமைகளை என்னால் முடிவு செய்துக் கொள்ள முடியும். நாம் ராமர் கோவில் பற்றி பேச வேண்டாம். நமது அடிப்படை உரிமைகலான ஊழலற்ற சமுதாயம், நல்ல சாலைகள், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவைகளைப் பற்றி பேசுவோம்.” என தனது உரையில் கூறி உள்ளார்.