காந்தியின் 150 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, புதுடெல்லியில் பிரதமர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்காக, திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி சோனம், கங்கனா, ஹிரானி, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

#ChangeWithin என்ற 100 விநாடி கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.ந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா தனது ட்விட்டர் பக்கத்தில்

அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே.. தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். பெரும் ஆளுமைகள் மற்றும் கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு, தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக நாங்கள் உணர்கிறோம். நான் என்னுடைய உணர்வுகளை வலியோடு பதிவு செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.