மோடி படேலை அவமதிக்கிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு

த்னா, மத்தியப் பிரதேசம்

ந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப்பாய் படேலை மோடி அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

பல சமஸ்தானங்களாக பிரிந்திருந்த நேரத்தில் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் வல்லப் பாய் படேல் ஆவார்.   அவருடைய 143 ஆம் பிறந்த தினம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.   அதை ஒட்டி அவர் பிறந்த குஜராத் மாநிலத்தில் உலகில் மிகப்பெரிய சிலையாக படேல் சிலையை அமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இந்த சிலை அவர் பிறந்த நாள் அன்று திறக்கபட உள்ளது.   தற்போது வடிவமைக்கபட்டுள்ள படேல் சிலையின் பின்புறத்தில் மேட் இன் சைனா  என்னும் வாசகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம் சத்னா பகுதியில் ஒரு நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.  அங்கு பேசிய அவர், ”குஜராத்தில் படேலுக்கு மோடி மிக பிரமாண்டமான சிலை ஒன்றை வைக்கிறார்.   இது மிகவும் நல்ல வேலைப்பாடுடையது.  அதே நேரத்தில் இச்சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் முதல் உள்துறை அமைச்சரை அவமதிக்கும் செயலாகும்.   பாஜகவினர் இச்சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதில்லை என கூறுகிறார்கள்.   ஆனால் சிலையின் பின்புறத்தில் மேட் இன் சைனா என்னும் வாசகம் உள்ளது.   இந்த சிலை இந்தியர்களுக்கு பதிலாக சீனர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது” என கூறி உள்ளார்.