சென்னை

பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி சென்னை மதுரை இடையிலான தேஜஸ் அதிவேக ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் கடந்த நவம்பர் மாதம் அதிவேக ரெயிலான தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்த தேஜஸ் ரெயில் 18 ஏசி இருக்கை பெட்டிகள், 2 உயர் வகுப்பு ஏசி இருக்கை பெட்டிகள் மற்றும் 3 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகள் கொண்டவை ஆகும். இந்த ஏசி இருக்கை பெட்டிகளில் 78 பேரும் உயர் வகுப்பு ஏசி இருக்கை பெட்டியில் 56 பேரும் பணம் செய்ய முடியும்.

இந்த ரெயில் பெட்டிகள் எஃப் ஆர் பி தகடுகளால் செய்யப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளின் உட்புறத்தில் சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடல்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களை பார்க்கவும் கேட்கவும் வசதிகள் அமைக்கபட்டுளன. எல் இ விளக்குகள் சிற்றுண்டி மேஜை உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ரெயில்வே வாரியம் இந்த தேஜஸ் ரெயிலை சென்னை மற்றும் மதுரை இடையே இயக்க அனுமதி அளித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்கிறார். அதை ஒட்டி இந்த ரெயில் நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை செண்டிரல் – எழும்பூர் – விழுப்புரம் இடையே இந்த ரெயில் 110 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.