மோடிக்கு இந்து மத தத்துவம் புரியவில்லை : ராகுல் கடும் தாக்கு

தயப்பூர்

பிரதமர் மோடிக்கு இந்து மதத்தின் அடிபடை தத்துவம் புரியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

வரும் 7 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பெரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை ஒட்டி மாநிலம் எங்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி மாநிலம் எங்கும் பயணம் செய்து பிரசாரங்கள் நடத்தி வருகின்றார். நேற்று அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசினார்.

அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, “பிர்தமர் மோடி தாம் ஒரு இந்து என சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் இந்து மதத்தில் அடிப்படை தத்துவங்களை புரிந்துக் கொள்ளவே இல்லை. இந்து மதத்தின் அடிப்படை என்ன என்பதும் கீதை சொல்வது என்ன என்பதும் மோடிக்கு தெரியாது. அவர் எந்த விதமான இந்து என்பதும் மக்களுக்கு தெரியாது.

மோடியை பொறுத்த வரை அனைத்து அறிவும் தனக்குள் இருந்து வருகிறது என நினைக்கிறார். அந்த நினைபினால் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவைகளை தனது இஷ்டப்படி நடத்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்ஹ்டி உள்ளார். சென்ற ஐ மு கூட்டணி ஆட்சியில் வங்கிகளில் வாராக்கடன் ரூ. 2 லட்சம் கோடி இருந்தது. அது தற்போது ரூ. 12 லட்சம் கோடி ஆகி விட்டது. இந்த வாராக்கடன்கள் மருத்துவர்களாலோ வழக்கறிஞர்களாலோ ஏற்படவில்லை. முழுக்க முழுக்க பணக்காரர்களால் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

மோடியின் ஆட்சியில் நடந்தது போல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் 3 முறை சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்தது. உங்களுக்கு அது குறித்து ஏதாவது தெரியுமா? தெரிந்திருக்காது. ஆனால் மோடியின் சர்ஜிகல் ஸ்டிரைக் மட்டும் நன்கு தெரியும். ஏனென்றால் ராணுவ நடவடிக்கைகள் வழக்கமானது. அந்த நடவடிக்கைகளை தனது அரசியல் சொத்தாக பிரதமர் மோடி பறைசாற்றி மாற்றம் செய்கிறார்.”என கூறி உள்ளார்.