வங்கதேசம் : ஷேக் அசீனாவுக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த மோடி

டாக்கா

ங்க தேச மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் அசீனா தமக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர் இந்தியப் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த வங்க தேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில்  ஷேக் அசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா வின் வங்க தேச தேசிய வாத கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.   அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிவில் அவாமி லீக் கட்சி 281 இடங்களை பெற்றுள்ளது.    இந்தக் கட்சி அந்நாட்டில் மீண்டும் 4 ஆம் முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க உள்ளது.    அவாமி லீக் கட்சி க்கும் ஷேக் அசீனாவுக்கும் உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியப் பிரதமர் மோடி, “வங்க தேச தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் அசீனாவுக்கு வாழ்த்துக்கள்.  வங்க தேச வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவ தயாராக உள்ளது.  இரு நாட்டு உறவை பலப்படுத்த இந்த்யா தயாராக உள்ளது’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு ஷேக் அசீனா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததுடன் தமக்கு வாழ்த்து தெரிவித்த முதல்  தலைவர் இந்தியப் பிரதமர் மோடி என கூறி உள்ளார்.   அத்துடன் வங்க தேச வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவதற்கு தனது நன்றியை கூறி உள்ளார்.

You may have missed