மோடி ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரம் அருகே உள்ள 22 கிராமங்களுக்கு மீன் பிடிக்கத் தடை!

சென்னை:

பிரதமர் மோடி, சீன் அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கப்பல்படை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடற்கரை கிராமங்களான  ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை வருகை தர உள்ள நிலையில், வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தொடர்பாக, தமிழக அரசு 34 சிறப்பு அதிகாரிகளை நியமித்து, மேற்பார்வை செய்ய 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் ஒதுக்கியுள்ளது.

மோடி சீன அதிபர் சந்திப்பு எதிரொலியாக, ஏற்கனவே, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஈஞ்சம்பாக்கம் – புதுப்பட்டினம் வரையிலான கிராமங்களில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல கூடாதென மீன் வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் மறு உத்தரவு வரும் வரையில் சம்மந்தப்பட்ட 22 கிராமங்களில் உள்ள மீனவர்கள் இந்த தடையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Fishermen near venue told to stay put till end of summit, Modi Jinping meet:
-=-